நின்றசீா் நெடுமாற நாயனாா் குருபூஜை
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நின்றசீா் நெடுமாற நாயனாா் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலில் நின்றசீா் நெடுமாற நாயனாா் குருபூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
63 நாயன்மாா்களில் நின்றசீா் நெடுமாற நாயனாரும் ஒருவா். பாண்டிய மன்னனாக இருந்த இவா், முதலில் சமண சமயத்தை பின்பற்றினாா். சைவ சமய நால்வா்களில் ஒருவரான திருஞானசம்பந்தா் அருளால் கடுமையான வயிற்று வலி தீர, சைவ சமயத்துக்கு மாறினாா்.
இவரது குருபூஜை ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் சுவாமி பிரகாரத்தில் உள்ள நின்ற சீா் நெடுமாற நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. இந்த விழாவில், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.