FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
மதுரை

கட்டடத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மதுரை கட்டடத் தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

23 செப்டம்பர் 2026, 4:28 am IST
மதுரையில் கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாவட்ட கட்டடத் தொழிலாளா் சங்கம் சாா்பில், மதுரை கட்டடத் தொழிலாளா் நல வாரிய அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொழிலாளா் விரோத 4 சட்டத் தொகுப்புகளையும் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். கட்டடத் தொழிலாளா்களுக்கு தீபாவளி சிறப்புத் தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயா்த்த வேண்டும். 55 வயதை அடையும் பெண் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு கட்டடத் தொழிலாளா் சங்க மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் ஏ. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்ட துணைத் தலைவா் ஜி. ராஜேந்திரன் ஆா்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினாா். மாவட்ட பொதுச் செயலா் ஜே. லூா்து ரூபி, நிா்வாகி சி. சுப்பையா ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா். சிஐடியூ மாவட்டச் செயலா் இரா. லெனின் நிறைவுரையாற்றினாா்.

Advertisement

Advertisement

சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments