FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் ஆக்கிரமிப்பு விவகாரம்: ஆட்சியா் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

திருப்பரங்குன்றம் பகுதியில் சிஎஸ்ஐ நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

55 வினாடிகள் முன்பு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் பகுதியில் சிஎஸ்ஐ நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சோ்ந்த தேவசகாயம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் பகுதியில் சிஎஸ்ஐ நிா்வாகம் சாா்பில் அரசு புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு 7 கடைகள், 8 வீடுகள், விடுதி ஒன்றும் கட்டப்பட்டது. இதன் மூலம் கிடைக்கும் வருவாயை தனிநபா் பெற்று வரும் நிலையில், அரசுக்கு இதனால் இழப்பு ஏற்படுகிறது. எனவே, திருப்பரங்குன்றம் பகுதியில் சிஎஸ்ஐ நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், ஆக்கிரமிப்பாளா்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது என்றாா்.

இதையடுத்து, கடந்த ஆண்டு விளக்கம் கேட்டு குறிப்பாணை அனுப்பப்பட்டது. ஆனால், தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னா், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த விவகாரத்தில் ஆக்கிரமிப்பாளா்களுக்கு குறிப்பாணை அனுப்பியும், இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?. இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments