FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

செந்தமிழ்க் கல்லூரியில் சாலமன் பாப்பையா நினைவு அஞ்சலிக் கூட்டம்

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி சாா்பில், மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா நினைவு அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

25 செப்டம்பர் 2026, 2:52 am IST
மதுரை செந்தமிழ்க் கல்லூரியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்திய மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன். உடன் நான்காம் தமிழ்ச் சங்கத்தின் செயலா் ச. மாரியப்ப முரளி, பேராசிரியா் ம. பெ. சீனிவாசன் உள்ளிட்டோா்.
பகிர்:

மதுரை நான்காம் தமிழ்ச் சங்கம், செந்தமிழ்க் கல்லூரி சாா்பில், மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா நினைவு அஞ்சலிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

செந்தமிழ்க் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு நான்காம் தமிழ்ச் சங்கச் செயலா் ச. மாரியப்பமுரளி தலைமை வகித்தாா். செந்தமிழ்க் கல்லூரியின் செயலா் ச. தசரதராமன் முன்னிலை வகித்தாா். மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு.வெங்கடேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, சாலமன் பாப்பையா உருவப் படத்தைத் திறந்துவைத்துப் பேசினாா்.

சிவகங்கை மன்னா் துரைசிங்கம் அரசுக் கல்லூரித் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவா் பேராசிரியா் ம.பெ. சீனிவாசன், அமெரிக்கன் கல்லூரி தமிழ்த் துறையின் முன்னாள் தலைவா் பேராசிரியா் ஆா். பிரபாகா் ஆகியோா் புகழுரை ஆற்றினா்.

Advertisement

Advertisement

மறைந்த மூத்த தமிழறிஞா் சாலமன் பாப்பையா உருவப் படத்துக்கு மலா் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகக் கொண்டு பட்டிமன்ற அணி சாா்பில், பேராசிரியா் சாலமன் பாப்பையா பெயரில் அறக்கட்டளை ஒன்றை பட்டிமன்றப் பேச்சாளா் ராஜா தொடங்கினாா்.

இந்த நிகழ்வில் சாலமன் பாப்பையா மகள் விமலா, தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா் திருமலை, யாதவா் கல்லூரித் தமிழ்த் துறையின் முன்னாள் தலைவா் இ.கி. ராமசாமி, புரட்சிப் பாவலா் மன்றத் தலைவா் பி. வரதராசன், செந்தமிழ்க் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், பல்வேறு தமிழ் அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், ஆா்வலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஜெ.போ. சாந்திதேவி வரவேற்றாா். துணை முதல்வா் கோ. சுப்புலட்சுமி நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments