ஏர்வாடி தர்காவில் கொடியிறக்கம்
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக திஙகள்கிழமை கொடியிறக்கம் நடைபெற்றது.
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சியாக திஙகள்கிழமை கொடியிறக்கம் நடைபெற்றது.
ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா ஆக.16-ஆம் தொடங்கியது. தொடர்ந்து ஆக. 26-ஆம் கொடியேற்றமும் நடைபெற்றது. சந்தனக்கூடு விழா செப்.7-ஆம் தேதி இரவு தொடங்கி 8-ஆம் தேதி காலை ஏர்வாடி தர்காவில் உள்ள பாதுசா நாயகம் ரவ்லாசரீபில் சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிலையில் நிறைவு நிகழ்ச்சியான கொடியிறக்கம் திங்கள்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற்றது. முன்னதாக உலக அமைதிக்காகவும், ஒற்றுமைக்காகவும் ராமநாதபுரம் மாவட்ட டவுன்காஜி சலாஹூதீன் பிரார்த்தனை செய்தார்.
Advertisement
Advertisement
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வக்புவாரிய தலைவர் தமிழ்மகன் உசேன், கீழக்கரை வட்டாட்சியர் கமலாபாய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.