FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஆடுகள் திருட்டு: 3 பேர் கைது

திருவாடானை அருகே ஆடுகள் திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

24 ஜனவரி 2024, 10:12 pm IST
பகிர்:

திருவாடானை அருகே ஆடுகள் திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

 திருவாடானை தாலுகா குஞ்சங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சூசை (55). இவர் வீட்டின் அருகே கட்டப்படிருந்த 2 வெள்ளாடுகளை வியாழக்கிழமை இரவு மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனராம். அதே போல் வெளியங்குடி கிராமத்தைச் சேர்ந்த குழந்தை (58) என்பவரின் வீட்டின் அருகே கட்டப்பட்டிருந்த 2 வெள்ளாடுகளும் திருடப்பட்டனவாம்.

 இது குறித்த புகாரின் பேரில் திருவாடானை போலீஸார் வழக்குப் பதிந்து நெட்டேந்தல் கிராமத்தை சேர்ந்த பாக்கியராஜ் (25), தேவகோட்டையை சேர்ந்த பழனிக்குமார் (35) நாகாச்சியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (25) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments