FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சடையனேந்தலில் கிராம நிர்வாக அலுவலர் இன்றி பொதுமக்கள் அவதி

கமுதி அருகே சடையனேந்தலில் உள்ள அலுவலகத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் வராததால் அலுவலகம் பூட்டியே கிடப்பதாகவும், சான்றிதழுக்காக 

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:12 am IST
பகிர்:

கமுதி அருகே சடையனேந்தலில் உள்ள அலுவலகத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் வராததால் அலுவலகம் பூட்டியே கிடப்பதாகவும், சான்றிதழுக்காக 8 கி.மீ தூரம் அலையும் அவலம் உள்ளதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
     கமுதி அருகே சடையனேந்தல் ஊராட்சிக்கு உள்பட்ட சடையனேந்தல், சம்பகுளம், நகரத்தார் குறிச்சி ஆகிய 3 கிராமங்களின் மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சடையனேந்தலில் கிராம நிர்வாக அலுவலக கட்டடம் அமைக்கபட்டது.  போதிய பராமரிப்பின்றி இந்த அலுவலக கட்டடம் சேதமடைந்ததால் கிராம நிர்வாக அலுவலர்கள் இந்த அலுவலகத்தை தவிர்த்து கமுதியில் தங்கியிருந்து பணியாற்றியுள்ளனர்.  2013 இல் ரூ. 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில்  அலுவலகம் மராமத்து செய்யப்பட்டது. ஆனாலும் கிராம நிர்வாக அலுவலர்கள் கமுதியில் தங்கியிருந்து பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் சான்றிதழ்களைப் பெறவும் நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளுக்காக மாணவர்களும், பொதுமக்களும் 8 கி.மீ. தூரம் உள்ள கமுதிக்கு அலையும் அவலம் உள்ளது. மேலும்  பேருந்து போக்குவரத்து வசதிகள் இல்லாததால் பலர் சான்றிதழ்களையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் பெற முடியாமல் தவித்து  வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சடையனேந்தல் கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலர் சென்று பணியாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments