FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் மாநில அளவிலான கூடைப் பந்தாட்டப் போட்டி

பரமக்குடி ஆயி ர வைசிய மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மாநில அளவிலான 

Updated On : 3 ஆகஸ்ட் 2018, 1:15 am IST
பகிர்:

பரமக்குடி ஆயி ர வைசிய மேல்நிலைப் பள்ளியில் கல்லூரி மாணவர்களுக்கிடையேயான மாநில அளவிலான கூடைப்பந்தாட்டப் போட்டி வியாழக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
ஆயிர வைசிய கூடைப் பந்தாட்ட கழகம் சார்பில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்க விழாவுக்கு சபைத் தலைவர் எஸ்.பாலுச்சாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர்கள் எஸ்.ராமன் செட்டியார், கே.ராதாகிருஷ்ணன், பள்ளி தலைமையாசிரியர் எம்.ஜஸ்டின் ஞானசேகர், கல்விக்குழு உறுப்பினர் ச.பூபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளியின் செயலாளர் எஸ்.கே.பி.இளங்கோ வரவேற்றார்.
காவல் துணைக் கண்காணிப்பாளர் என்.பாஸ்கரன், எஸ்.ஜோதிதாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
 போட்டியை ராமநாதபுரம் மாவட்ட கூடைப் பந்தாட்டக் கழக தலைவர் கே.வி.ஆர்.ராம்பிரபு தொடக்கி வைத்தார். மாணவர்கள், மாணவிகளுக்கு தனித்தனியாக நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் 6 முதல் 7 போட்டிகள் வரை நடத்தப்படவுள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments