முதுகுளத்தூரில் வீட்டுக்குள் புகுந்து 16 பவுன் நகை திருட்டு: ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1.40 லட்சம் அபகரிப்பு
முதுகுளத்தூரில் புதன்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்து 16 பவுன் நகை, ரூ.1.40 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
முதுகுளத்தூரில் புதன்கிழமை இரவு வீட்டுக்குள் புகுந்து 16 பவுன் நகை, ரூ.1.40 லட்சம் பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனை 2 ஆவது தெருவில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம் மகன் மகாதேவன்(74). இவர் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.
அப்போது நள்ளிரவில் அடையாளம் தெரியாத மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 16 பவுன் நகை, ரூ.13ஆயிரம் ரொக்கம் மற்றும் இரண்டு ஏ.டி.எம் கார்டுகளை திருடி சென்றனர்.
மேலும் ஏடிஎம் கார்டுகளின் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.40 லட்சம் பணத்தையும் திருடியுள்ளனர்.
இதுகுறித்து முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் மகாதேவன் அளித்த புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் சுதர்சன் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார். இது குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் உத்தரவின் பேரில், தனிப்படை சார்பு ஆய்வாளர் விக்னேஸ்வரன் தலைமையில் வியாழக்கிழமை மூன்று நபரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.