FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி தனியார் நிறுவன விளம்பர பதாகை

கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பதாகைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 9:56 pm
பகிர்:

கமுதி அரசு மருத்துவமனையில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பதாகைகளை அகற்ற சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அரசு மருத்துவமனையில் தற்போது  அறுவை சிகிச்சை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்த பரிசோதனை, இசிசி, பெண்கள் குடும்ப நல அறுவை சிகிச்சை, எலும்பு முறிவு, பல் மருத்துவம், சித்த மருத்துவ பிரிவு, இரத்த வங்கி,  மேலும் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு நவீன சிகிச்சைகள், அறுவை சிகிச்சைகள், பாம்பு கடி, நாய்கடி  உள்ளிட்ட 37 வகை மருத்துவ பிரிவுகளின் கீழ் முறையான சிகிச்சைகள் அளிக்கும் வகையில் சிறப்பு வசதிகள், மருத்துவ உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 
இந்நிலையில் தனியார் மறுவாழ்வு மையங்கள் பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அரசு மருத்துவமனை வளாகத்துக்குள் அனுமதியின்றி தங்களின் விளம்பர பதாகைகளை அமைத்துள்ளனர். இது அனைத்து வசதியும் கொண்ட  அரசு மருத்துவமனையில் இலவச சிகிச்சை பெற வரும் ஏழை மக்களின் கவனத்தை ஈர்த்து பணம் பறிக்கும் முயற்சியாக உள்ளது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள தனியார் விளம்பர பதாகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments