FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ரேபிடோ ஓட்டுநர் மும்பையில் கைது

ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பைச் சேர்ந்தபயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் ரேபிடோ ஓட்டுநர் மும்பையில் கைது

கைது நடவடிக்கை - பிரதி படம்
பகிர்:

ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர், மும்பையின் மாஹிம் மெட்ரோ ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் ரேபிடோ ஓட்டுநராக பணியாற்றிக் கொண்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இணையதளம் மூலம் பிரிவினைவாத கருத்துக்களை பரப்பி வந்தது மற்றும் மதவாத வன்முறையைத் தூண்டும் வகையில் செயல்பட்டது போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படை அதிகாரிகள், 33 வயதான நபரை கைது செய்திருக்கிறார்கள்.

மொஹம்மது ஹசன் அபு என்று அடையாளம் காணப்பட்டுள்ள நபரின் நடமாட்டம் குறித்து ரகசிய தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில், இவருக்கும் பாகிஸ்தானிலிருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே தொடர்பு இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

டெலிகிராம் குழு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் பேச்சுகளை பகிர்ந்து வந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

மும்பையில், பயங்கரவாதி என சந்தேகிக்கப்படும் நபர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments