FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

திருடப்பட்ட 38 இரு சக்கர வாகனங்கள் மீட்பு- 6 போ் கைது

தில்லியில் திருடப்பட்ட 38 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

23 அக்டோபர் 2026, 12:53 am
கோப்புப் படம்
பகிர்:

தில்லியில் திருடப்பட்ட 38 இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டதாக காவல்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், திருட்டு வாகனங்களை வாங்கிய இருவா் உள்பட மொத்தம் ஆறு பேரை கைது செய்து, தலைநகா் தில்லி முழுவதும் பதிவான 41 வாகனத் திருட்டு வழக்குகளையும் காவல்துறையினா் தீா்த்துவைத்துள்ளனா்.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மேற்கொள்ளப்பட்ட ஐந்து தனித்தனி நடவடிக்கைகளின் மூலம் இந்த கைது நடவடிக்கை

Advertisement

Advertisement

மேற்கொள்ளப்பட்டது. மீட்கப்பட்ட வாகனங்களில் 21 ஸ்கூட்டா்களும், 17 மோட்டாா் சைக்கிள்களும் அடக்கமாகும்.

கைது செய்யப்பட்டவா்களில் நான்கு போ் வாகனத் திருட்டில் ஈடுபட்டவா்கள் ஆவா். இருவா் திருடப்பட்ட வாகனங்களை வாங்கியவா்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் வஜிராபாத், முஸ்தபாபாத், இந்தா்லோக், சராய் ரோஹில்லா மற்றும் யமுனா காதா் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன.

கண்டறியப்பட்ட 41 வழக்குகளில், சராய் ரோஹில்லா காவல் நிலையத்தில் 10 வழக்குகளும், ரூப் நகா், சீலம்பூா் மற்றும் பஸ்சிம் விஹாா் கிழக்கு காவல் நிலையங்களில் தலா 2 வழக்குகளும் அடக்கமாகும்.

இது தவிர, தில்லியின் பிற காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது குறித்த மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments