திருவாடானை பேருந்து நிலையத்தில் நிழற்குடையை சீரமைக்கக் கோரிக்கை
திருவாடானை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாடானை புதிய பேருந்து நிலையத்துக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகள் என தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடையின் மேற்கூரைகள் காற்றில் பறந்து விட்டன.
இதனால், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலிலும், மழையிலும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், திருவாடானை பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் நிழற்குடை மேற்கூரையை சீரமைக்க வேண்டும் என பயணிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.