அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
ராமேசுவரத்தில் அகில இந்திய யாத்திரைப் பயணியாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
ராமேசுவரத்தில் அகில இந்திய யாத்திரைப் பயணியாளர்கள் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டனர்.
இதில், தலைவராக அ. பாஸ்கரன், செயலராக எஸ். காளிதாஸ், பொருளாளராக என். மலைச்சாமி மற்றும் துணைத் தலைவர்களாக முனியசாமி, சுப்பிரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும், செயற்குழு உறுப்பினர்கள் 11 பேரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இது குறித்து புதிய தலைவர் அ. பாஸ்கரன் கூறியது: அகில இந்திய யாத்திரைப் பணியாளர்கள் சங்கம் சார்பில், ராமேசுவரம் வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ஆம்புலன்ஸ் சேவையும் 24 மணி நேரம் உள்ளது. இங்கு, பணம் மற்றும் உடைமைகளை தவறவிடும் பயணிகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறோம் என்றார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.