அரசு அலுவலகங்கள்,பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா கோலாகலம்
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை புதன்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் விமரிசையாகக் கொண்டாடின.
சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நாட்டின் 72 ஆவது சுதந்திர தினத்தை புதன்கிழமை அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் விமரிசையாகக் கொண்டாடின.
திருப்பத்தூர்: திருப்பத்தூர் காந்தி சிலையருகே காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்து கொடியேற்றி வைத்தார். தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் ராமசாமி, மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட பொதுச் செயலாளர் எஸ்.எம்.பழனியப்பன் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துராஜா மெட்ரி பள்ளி, ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி, மருதுபாண்டியர் நினைவிடம், ஆலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குளோபல் இன்டர்நேஷனல் பள்ளி, மாங்குடி அரசு நடுநிலைப்பள்ளி, சோலுடையான்பட்டி அரசு தொடக்கப் பள்ளி, பிரான்மலை ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, திருப்பத்தூர் பேரூராட்சி ஆகிய இடங்களில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மாணவ, மாணவியர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் நடைபெற்ற நிகழ்ச்சியில் 1999 இல் நடந்த கார்கில் போரில் உயிர் நீத்த எஸ். முகிலன் தியாகத்தை போற்றும் வகையில் அவரது தாயார் சிந்தாமணிக்கு துணைவேந்தர் சால்வை அணிவித்து சான்றிதழ் வழங்கி கௌரவித்தார். நிகழ்ச்சியில் பதிவாளர் ஹா. குரு மல்லேஷ் பிரபு, தேர்வாணையர் பி. சக்திவேல், தனி அலுவலர் பாலச்சந்திரன், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், அலுவலர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
காரைக்குடி நகராட்சி அலுவலகம், தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் மண்டல அலுவலகம், காரைக்குடி செக்ரி நிறுவனம், காரைக்குடி தொழில் வணிகக் கழகம், காரைக்குடி அழகப்பா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நேஷனல் கேட்டரிங் கல்லூரி, ஸ்ரீராகவேந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சிபிஎஸ்இ பள்ளி, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி, ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, காரைக்குடி மகரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி அருகே ஆறாவயல் பாரத் பப்ளிக் பள்ளி, இந்தியன் வங்கி, அமராவதிபுதூர் ஸ்ரீ ராஜராஜன் கல்விக்குழுமம் பொறியியல் கல்லூரி, ராஜராஜன் சிபிஎஸ்இ பள்ளி, காரைக்குடி அருகே புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மேட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செட்டிநாடு பப்ளிக் பள்ளி, , சிராவயல் பள்ளி, காரைக்குடி அருகே கிட் அன்ட் கிம் கல்லூரி, ஆகிய இடங்களில் தேசியக் கொடி ஏற்றிவைத்து இனிப்புகள் வழங்கிக்கொண்டாடினர்.
பரமக்குடி: பரமக்குடி அரசு கலைக்கல்லூரி, பரமக்குடி கே.ஜே.கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளி, மகளிர் காவல் நிலையம், ஆயிர வைசிய மேல்நிலைப் பள்ளி, ஆயிரவைசிய மெட்ரிக் பள்ளி, லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வ.உ.சி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செளராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி, பாரதியார் நடுநிலைப் பள்ளி, காளிதாஸ் நடுநிலைப் பள்ளி, கமுதக்குடி இந்து தொடக்கப்பள்ளி, கற்பக விநாயகர் கல்வியியல் கல்லூரி, ஆர்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றில் தேசியக்கொடியேற்றப்பட்டது. கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பரமக்குடி கோட்டாட்சியர் அலுவலகம், காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம், நகர் காவல் நிலையம், வட்டாட்சியர் அலுவலகம் ,நகராட்சி அலுவலகம், பெண்கள் சிறை, தலைமை தபால் நிலையம், சீர்மரபினர் கல்லூரி விடுதிஆகிய இடங்களில் தேசியக்கொடியை ஏற்றினர்.
திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி இஸ்லாமிக் மெட்ரிக்குலேசன் பள்ளியில் பள்ளியின் தாளாளர் சகுபர் சாதிக் தேசிய கொடியை ஏற்றினார். தொண்டி அரசு மேல் நிலைப்பள்ளி, தொண்டி கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பள்ளி, தினைகாத்தான்வயல் உயர் நிலைப்பள்ளி, தினைகாத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளி, திருவாடானை நீதிமன்றம்,காவல் துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம், , அரசு மருத்துவமனை, சார்பதிவாளர் அலுவலகம், தீயணைப்பு மற்றும் மீட்பு அலுவலம் , அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ராஜன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, ஆதியூர் பனைவெல்ல கூட்டுறவு சங்கம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் ஆகியவற்றில் தேசியக்கொடியேற்றப்பட்டது.
முதுகுளத்தூர்: முதுகுளத்தூர்,கடலாடி,சாயல்குடி பள்ளி,கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களில் 72-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு புதன்கிழமை இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
முதுகுளத்தூர்: ஊராட்சி ஒன்றிய அலுவலகம், பேரூராட்சி, வட்டாட்சியர் அலுவலகம், காவல்நிலையம் ஆகியவற்றில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சோனைமீனாள் மகளிர் அறிவியல் மற்றும் கலை கல்லூரி, பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளி, பள்ளிவாசல் தொடக்கப்பள்ளி, நர்சரி பள்ளி, முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீ கண்ணா மெட்ரிக்குலேசன் பள்ளி, எம்.தூரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காத்தாகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கீரனூர் ஊராட்சி உயர் நிலைப்பள்ளி ஆகியவற்றில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதுகுளத்தூர் காந்திசிலையின் முன் இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாநில துணைத்தலைவர் பி.வரதராஜன் கொடி ஏற்றினார். பின்பு சிலைக்கு மலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
கடலாடி ஊராட்சி ஒன்றியம் சிக்கல் இந்தியன் மெட்ரிக் பள்ளி, சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளி, பொதிகுளம் யாதவர் குடியிருப்பு நடுநிலைப்பள்ளி, சாயல்குடியில் மலட்டாறு வி.வி.எஸ்.எம். பள்ளி, உச்சிநத்தம் ஸ்ரீ ஆறுமுகவிலாஸ் இந்து தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் தேசியக் கொடியேற்றப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ராமேசுவரம்: ராமேசுவரத்தில் தாலுகா அலுவலகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகம். ராமநாதசுவாமி திருக்கோயில் அலுவலகம், பர்வதவர்த்தினி அம்பாள் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, மண்டபம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கலாம் தேசிய நினைவிடம் மற்றும் பல்வேறு மத்திய,மாநில அரசுத்துறை அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தினர்.
குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல்காலம் வீட்டில் அவரது சகோதரர் முகமது முத்துமீராமரைக்காயர் தேசிய கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். ராமநாதசுவாமி திருக்கோயிலில் சுதந்திர தினத்தையொட்டி சமபந்தி விருந்து நடைபெற்றது. கோயில் இணை ஆணையர் கோ.செ.மங்கையர்கரசி சமபந்தி விருந்தை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட பாஜக தலைவர் முரளிதரன்,அண்ணாதொழிற்சங்கத்தலைவர் அண்ணாத்துரை,செயலாளர் கலைச்செல்வன்,பொருளாளர் ஜெய்கணேஷ் மற்றும் முனியசாமி,அகில இந்திய யாத்திரை பணியாளர் சங்கத்தலைவர் பாஸ்கரன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்தகொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.