முதல்வரைக் கண்டித்து ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாக தமிழக முதல்வரைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அரசு ஊழியர்களை தரக்குறைவாக பேசியதாக தமிழக முதல்வரைக் கண்டித்து ராமநாதபுரத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பி.சேகர் தலைமை வகித்தார். சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களான எஸ்.முருகேசன், எமர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஐ.ராஜேந்திரன்,பொருளாளர் சண்முகநாததுரை,முன்னாள் மாவட்ட செயலாளர் சா.கணேசமூர்த்தி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க செயலாளர் சோமசுந்தரம், ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டத் தலைவர் முனியசாமி உள்பட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர். மக்களின் நலனுக்காகவும் அரசு ஊழியர், ஆசிரியர் சங்க அமைப்புகள் பல்வேறு போராட்டங்களை மக்களோடு இணைந்து நடத்தி வந்திருக்கும் நிலையில் அரசு ஊழியர்களை கண்ணியக்குறைவாக தமிழக முதல்வர் பேசியதாகக் கூறி அவைரக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.