ராமேசுவரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
ராமேசுவரம் நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேசுவரம் நகராட்சி மற்றும் கோயில் நிர்வாகத்தை கண்டித்து பாஜகவினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராமேசுவரம் நகராட்சியில் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் பெரும் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், பொதுமக்களுக்கு பயனுள்ள திட்டங்களை உருவாக்கிட வேண்டும், ராமநாதசுவாமி கோயிலில் தீர்த்தங்களை மாற்றி பக்தர்களை அலைக்கழிக்கும் கோயில் நிர்வாகத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜக சார்பில் என்.எஸ்.கே. வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், மாநில செயலாளர் பாலகணபதி தலைமை வகித்தார். நகர் பொதுச்செயலாளர் எஸ்.ஏ.பூபதி முன்னிலை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் சுந்தரமூர்த்தி,முன்னாள் நகர் தலைவர் முத்துச்செல்வம், மகளிரணி நிர்வாகிகள் சாரதா, புனிதா, ஜெயந்தி உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.