கமுதி அருகே சாலைகள் சேதம்: விபத்துகள் அதிகரிப்பு
கமுதி அருகே சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்துள்ளதால், இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
கமுதி அருகே சாலையோரங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு, சாலை சேதமடைந்துள்ளதால், இரவு நேரங்களில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன.
கமுதி- கோவிலாங்குளங்குளம் வழியாக அரியமங்கலம், கருத்தறிவான் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலை சமீபத்தில் சீரமைக்கபட்டது. ஆனால் சாலையோரங்களை முறையாக மராமத்து செய்யாததால், சிறுமழைக்கே மண் அரிப்பு ஏற்பட்டு, சேதமடைந்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிடும் வாகனங்கள் சாலையோர பள்ளங்களில் சிக்கி விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.
எனவே நெடுஞ்சாலைத்துறையினர் சேதமடைந்த சாலையினை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.