FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கமுதி அருகே மணல் கடத்திய 3 டிப்பர் லாரிகள் பறிமுதல்

கமுதி அருகே  புதன்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Updated On : 7 ஜூன் 2018, 7:20 am IST
பகிர்:

கமுதி அருகே  புதன்கிழமை அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற டிப்பர் லாரிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியில் போலீஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் திம்மநாதபுரம் விலக்கில்  புதன்கிழமை 3 டிப்பர் லாரிகள் அனுமதியின்றி  மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து லாரி ஓட்டுநர்கள் விருதுநகர் மாவட்டம் நென்மேனியை சேர்ந்த அமிர்தராஜ், மதுரை மாவட்டம் பேரையூர் வட்டம் வையம்பாளையத்தை சேர்ந்த முத்தையா, செம்பொன்நெருஞ்சியை சேர்ந்த மணிகண்டன் மற்றும் கிளீனர் உமாசங்கர் உள்ளிட்டோர் மீது பெருநாழி போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 3 டிப்பர் லாரிகளை மேல் நடவடிக்கைக்காக பரமக்குடி சார் ஆட்சியருக்கு அனுப்பி வைத்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments