பேருந்து மீது பைக் மோதி காயமடைந்த இளைஞர் சாவு
சாயல்குடி அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பைக் மோதியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் புதன்கிழமை இறந்தார்.
சாயல்குடி அருகே நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பைக் மோதியதில் காயமடைந்தவர் மருத்துவமனையில் புதன்கிழமை இறந்தார்.
சாயல்குடி நரிப்பையூர் மாணிக்க நகர் அருகே தனியார் பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்போது மூக்கையூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் குமார் (27), சாயல்குடிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது, எதிர்பாராதவிதமாக நின்று கொண்டிருந்த தனியார் பேருந்து மீது பைக் மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமார், தூத்துக்குடி தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்து விட்டார். இந்த விபத்து குறித்து சாயல்குடி போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.