இளம்சிறார்கள் நலனில் வழக்குரைஞர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்: ராமநாதபுரம் முதன்மை நீதிபதி பேச்சு
இளம்சிறார்கள் நலனில் சட்டப் பாதுகாவலர்களாக இருக்கும் வழக்குரைஞர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி பேசினார்.
இளம்சிறார்கள் நலனில் சட்டப் பாதுகாவலர்களாக இருக்கும் வழக்குரைஞர்களும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என ராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி பேசினார்.
ராமநாதபுரம் சமரசத்தீர்வு மையத்தில் இளம் சிறார்களுக்கான நீதி என்ற தலைப்பில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் வழக்குரைஞர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கருத்தரங்கை தொடங்கி வைத்து மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி பேசியது: பொதுவாக சிறார்களுக்கு நடக்கும் கொடுமைகள் அதிகரித்து வருகிறது. மயக்கம் தரும் இனிப்புகளை கொடுத்து குழந்தைகளை மயக்கி அவர்களை தவறான செயல்களுக்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.
குழந்தைகளுக்கு நடக்கும் கொடுமைகள் குறித்து செய்தித்தாள்களிலும், தொலைக்காட்சிகளிலும் தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. இதை முற்றிலுமாக ஒழிக்க சட்டப் பாதுகாவலர்களாகிய வழக்குரைஞர்களும் இளம் சிறார்கள் நலனில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். மக்கள் நீதிமன்றங்கள் நடக்கும் போதும் வழக்குரைஞர்கள் முழுமையான ஒத்துழைப்பு தரவேண்டும் என்றார்.
கருத்தரங்கிற்கு தலைமைக்குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எம்.சிவப்பிரகாசம், வழக்குரைஞர் சங்க தலைவர் ஆ.ரவிச்சந்திரராமவன்னி, செயலாளர் ஏ.ஆர்.நம்புநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், நீதிபதியுமான வி.ராமலிங்கம் வரவேற்றார்.
குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு செயல்படும் விதம் என்ற தலைப்பில் மாவட்ட குழந்தைகள்
பாதுகாப்பு அலுவலர் எஸ்.துரைமுருகன், சிறார்கள் நீதிமன்றத்தின் செயல்பாடுகள் என்ற தலைப்
பில் வழக்குரைஞர் ஆர்.முருகேசன், குழந்தைகள் நலக்குழு செயல்படும் விதம் என்ற தலைப்பில் குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆர்.சகுந்தலா, சிறார்களுக்கான சிறப்பு விசாரணை அறிக்கை என்ற தலைப்பில் நன்னடத்தை அலுவலர் எல்.விஜயசாரதி ஆகியோர் வழக்குரைஞர்களுக்கு பயிற்சியளித்தனர்.
ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.