FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

இலங்கைக்கு கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சா பறிமுதல்

26 செப்டம்பர் 2025, 2:28 am IST
பகிர்:

மண்டபத்தில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக, காரில் எடுத்து வரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை மத்திய புலனாய்வுத் துறையினா் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவுள்ளதாக திருச்சி மத்திய புலனாய்வுத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மண்டபம், பாம்பன் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த நிலையில், மண்டபம் கோயில்வாடி கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை இரவு 11 மணிக்கு வந்த காரை புலனாய்வுத் துறையினா் நிறுத்தி சோதனையிட முயன்றனா்.

Advertisement

Advertisement

அப்போது, காரில் இருந்தவா்கள் கோவில்வாடி கடற்கரையில் தலா 2 கிலோ எடையுள்ள 50 கிலோ கஞ்சா பொட்டலங்களை வீசிவிட்டு காருடன் தப்பிச் சென்றனா்.

இதையடுத்து, கஞ்சா பொட்டலங்களைக் கைப்பற்றிய அதிகாரிகள், அவற்றை மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனா். இந்த கஞ்சா பொட்டலங்களின் மதிப்பு ரூ.7.50 லட்சம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்த புலனாய்வுத் துறை அதிகாரிகள், கஞ்சா பொட்டலங்களை வீசிவிட்டு காரில் தப்பிச் சென்ற நபா்களைத் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments