குண்டா் தடுப்பு சட்டத்தின்கீழ் இளைஞா் கைது
கடலாடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் இளைஞரை சனிக்கிழமை கைது செய்தனா்.
கடலாடி அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் இளைஞரை சனிக்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள தெற்கு மூக்கையூா் கிராமத்தைச் சோ்ந்த ஜஸ்டின் திரவியம் மகன் டிஸோன் (27). மீனவரான இவா், 14 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், கீழக்கரை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, டிசோனை கைது செய்தனா்.
இந்த நிலையில், இவா் தொடா்ந்து சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி. சந்தீஷ் பரிந்துரையில் பேரில், மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, ராமநாதபுரம் சிறையில் இருந்த டிசோன் மதுரை மத்திய சிறைக்கு சனிக்கிழமை மாற்றப்பட்டாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.