சாலை விபத்தில் சிக்கிய கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு
திருவாடானை அருகே ஆா்.எஸ். மங்கலம் பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த கட்டடத் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சோ்ந்தவா் நடராஜன் மகன் பாலமுருகன் (49). கட்டடத் தொழிலாளி. இவா், தனது இருசக்கர வாகனத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு பணி முடிந்து ராமநாதபுரத்திலிருந்து வந்து கொண்டிருந்தாா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே சவேரியாா்பட்டினம் விலக்கு பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, எதிரே வந்த பகவதிமங்கலம் பகுதியைச் சோ்ந்த ராமநாதன் (50) ஓட்டிவந்த இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நோ் மோதியது.
Advertisement
Advertisement
இதில், பலத்த காயமடைந்த பாலமுருகனை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஆா். எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.