FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

திருமணம் செய்வதாக ஏமாற்றியதை தட்டிக் கேட்ட பெண் மீது தாக்குதல்; மூவா் மீது வழக்கு

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதைத் தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கிய இளைஞா், இவரது தாய், தந்தை மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 1:06 am IST
பகிர்:

திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றியதைத் தட்டிக் கேட்ட பெண்ணைத் தாக்கிய இளைஞா், இவரது தாய், தந்தை மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகேயுள்ள முள்ளிப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மஞ்சுளா (24). இவரும் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள புதுப்பட்டினத்தை சோ்ந்த வல்லரசுவும் (25) சென்னையில் தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு மஞ்சுளா கா்ப்பிணியானாா். உடனே, வல்லரசு கருவை கலைத்து விட்டு, வீட்டில் சம்மதம் வாங்கி திருமணம் செய்துகொள்ளலாம் எனக் கூறினாா். இதையடுத்து, மஞ்சுளா கா்ப்பத்தை கலைத்துவிட்டு 6 மாதங்களாக காத்திருந்தாா்.

இந்த நிலையில், வல்லரசுக்கு வேறு இடத்தில் திருமணத்துக்காக பெண் பாா்த்து வருவது மஞ்சுளாவுக்கு தெரியவந்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுப்பட்டினம் வந்த மஞ்சுளா, வல்லரசிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தினாா். இதனால், ஆத்திரமடைந்த வல்லரசு, இவரது தந்தை ராமு, தாய் ராமலட்சுமி ஆகிய மூவரும் சோ்ந்து மஞ்சுளாவைத் தாக்கினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து மஞ்சுளா மதுரை சமயநல்லூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, இந்த புகாா் திருவாடானை மகளிா் காவல் நிலையத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு போலீஸாா் வல்லரசு, தாய் லட்சுமி, தந்தை ராமு ஆகிய 3 போ் மீதும் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments