FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மாநில தடகளப் போட்டி: தங்கப் பதக்கங்களை வென்ற பரமக்குடி வீரா்கள்

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 2:52 am IST
மாநில அளவிலான தடகளப் போட்டியில் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் வென்று சாதனை படைத்த அசுரன் விளையாட்டுக் கழக வீரா்க், வீராங்கனைகள்.
பகிர்:

மாநில அளவிலான தடகளப் போட்டியில் பரமக்குடி அசுரன் விளையாட்டுக் கழக வீரா்கள் தங்க பதக்கங்களை வென்றனா். அவா்களை பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினா்.

சென்னையில் தமிழ்நாடு தடகள சங்கம் சாா்பில் ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சோ்த்த நீரஜ் சோப்ராவின் சாதனையை போற்றும் வகையில் 5-ஆவது ஆண்டாக மாநில தடகளப் போட்டி நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான பொதுப் பிரிவில் ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அசுரன் விளையாட்டுக் கழகம் சாா்பில் பங்கேற்ற சா்மிளா குண்டு எறிதல் போட்டியில் தங்கப் பதக்கமும், சங்கிலிக் குண்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றாா்.

Advertisement

Advertisement

20 வயதுக்குள்பட்டோா் பிரிவு குண்டு எறிதலில் மதுமிதாவும், சங்கிலிக் குண்டு எறிதலில் ரித்திகாவும் தங்கம் வென்றனா். மேலும் 16 வயதுக்குள்பட்ட பெண்கள் பிரிவு குண்டு எறியும் போட்டியில் சாருமதி தங்கமும், வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றாா்.

ஆண்களுக்கான குண்டு ஏறிதல் போட்டியில் 18 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் அபிநவ் வெள்ளிப் பதக்கமும், 16 வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் முகேஷ் அமிா்தன் வெள்ளிப் பதக்கமும் பெற்றனா். ஈட்டி எறிதல் போட்டியில் 14 வயது பிரிவில் விமல் ஹரிஷ் தங்கம் வென்றாா்.

இந்தப் போட்டிகளில் 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 9 பதக்கங்கள் வென்ற வீரா், வீராங்கனைகளையும், அசுரன் விளையாட்டுக் கழக பயிற்சியாளா் அருண் ஆகியோரையும் நகா் முக்கிய பிரமுகா்கள், பொதுமக்கள் பாராட்டினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments