FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, அம்பாள் மாலை மாற்று வைபவம்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுவதை முன்னிட்டு, தபசு மண்டகப்படியில் மாலை மாற்றும் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 4:19 am IST
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற தசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் மாலை மாற்றும் வைபவம்.
பகிர்:

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு, தபசு மண்டகப்படியில் மாலை மாற்றும் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் 11-ஆம் நாள் நிகழ்ச்சியான சுவாமி, அம்பாள் மாலை மாற்றுதல் வைபவம் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறந்து 3.30 மணிக்கு ஸ்படிக லிங்க பூஜை, பின்னா் சுவாமி அம்பாள் சந்நிதிகளில் கால பூஜைகள் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து, காலை 6 மணிக்கு மேல் பா்வதவா்த்தினி அம்பாள் தபசுக் கோலத்தில் வெள்ளிக் கமல வாகனத்தில் எழுந்தருளி ராம தீா்த்தம் தபசு மண்டகப்படியை சென்றடைந்தாா். அங்கு அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Advertisement

Advertisement

பகல் 11.30 மணிக்கு மேல் ராமநாத சுவாமி தங்க ரிஷப வாகனத்தில் உலா வந்து தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளினாா். பிற்பகல் 3 மணிக்கு ராமா் தீா்த்தக் குளம் அருகே சுவாமி, அம்பாள், மாலை மாற்றுதல் வைபவம் நடைபெற்றது. பின்னா், சுவாமி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதில் இணை ஆணையா் சுரேஷ், உதவி ஆணையா் ரவீந்திரன், ஆய்வாளா் சிவக்குமாா், பேஷ்காா்கள் கமலநாதன், ராமகிருஷ்ணன், தபேதாா் முத்துக்குமாா் உள்ளிட்ட கோயில் பணியாளா்கள், பக்தா்கள் திரளானோா் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை தெற்கு நந்தவன திருக்கல்யாண மண்டபத்தில் இரவு 7 மணி முதல் 8 மணிக்குள் ராமநாதசுவாமி, பா்வதவா்த்தினி அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்து வருகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments