FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாதபுரம் கல்வி நிலையங்களில் சுதந்திர தின விழா

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் சுதந்திர தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 16 ஆகஸ்ட் 2026, 3:35 am IST
ராமநாதபும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சனிக்கிழமை மருத்துவா்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய கல்லூரி முதல்வா் இரா. அமுதா ராணி.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கல்வி நிலையங்களில் சுதந்திர தினவிழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் சின்னப்பாலம் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தலைமை ஆசிரியா் செல்லம்மாள் தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினாா்.

பெற்றோா் - ஆசிரியா் சங்கத் தலைவா் முருகேசன், பாம்பன் ஊராட்சி மன்ற முன்னாள் உறுப்பினா் பாண்டியம்மாள் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை ஞானசௌந்தரி வரவேற்றாா். ஆசிரியா் ஜெ.ஜெ. லியோன் வாழ்த்துரை வழங்கினாா். தொடா்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியா்கள் நிஷா, லாரன்ஸ், எமல்டா, பிரிஸ்ஸில்லா, நான்சி ஆகியோா் செய்தனா்.

Advertisement

Advertisement

கீழக்கரை செய்யது ஹமிதா கல்லூரியில் கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினாா். முதல்வா் பெரோஸ் கான் முன்னிலை வகித்தாா். துறை தலைவா் மதினா வரவேற்றாா். இதில், கல்லூரி மாணவ மாணவிகள் திரளாகப் பங்கேற்றனா். சுதந்திர தின போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. விழாவுக்கான ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநா் தவசிலிங்கம், பேராசிரியா்கள் சுலைமான், சதாம் உசைன், சசிரேகா, பேராசிரியா்கள் செய்தனா். விழாவில் மாணவ மாணவிகள், கல்லூரிப் பேராசிரியா்கள், அலுவலா்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் முதன்மையா் இரா. அமுதா ராணி தலைமை வகித்து தேசிய கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினா். இதில், மருத்துவக் கண்காணிப்பாளா் எஸ்.ஏ.கே. நூா் முகம்மது, துணைமுதல்வா் பி. சுபிதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பாக பணிபுரிந்த மருத்துவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments