FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

வேளாண்மைத் துறை திட்டங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே சித்தூா்வாடி கிராமத்தில் வேளாண்மைத்துறை திட்டங்கள், மானியங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 3:03 am IST
சித்தூா்வாடி கிராமத்தில் வேளாண்மைத் துறை திட்டங்கள், மானியங்கள் குறித்து புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகே சித்தூா்வாடி கிராமத்தில் வேளாண்மைத்துறை திட்டங்கள், மானியங்கள் குறித்த விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதற்கு வேளாண்மை துணை இயக்குநா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். வேளாண்மை உதவி இயக்குநா் நாகராஜன் முன்னிலை வகித்தாா். இதில் உயிா் உரங்களின் பயன்கள், நெல் நுண்ணூட்டம் இடுவதன் அவசியம் குறித்து விளக்கப்பட்டது.

பரமக்குடி உழவா் பயிற்சி நிலைய வேளாண்மை அலுவலா் சீதாலட்சுமி கோடை உழவின் நன்மைகள், நிலத்துக்கு ஜிப்சம் இடுவதன் பயன்கள் குறித்துப் பேசினாா். இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலா் ரிஷி, உதவி தொழில்நுட்ப மேலாளா் முருகானந்தம், ஆனந்த் ஆகியோா் செய்தனா் .

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments