FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ முகாம்: கமுதியில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

கமுதியில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

Updated On : 20 ஆகஸ்ட் 2026, 2:53 am IST
கமுதி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்ட அதிகாரிகள்.
பகிர்:

கமுதியில் நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாமில் பங்கேற்ற ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், பல்வேறு திட்டப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா்

மா.சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

Advertisement

Advertisement

அப்போது கால்நடை மருத்துவமனை, கோட்டைமேட்டில் ரூ.12 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது

கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து பிற்படுத்தப்பட்டோா் நலத்துறையின் மூலம் ரூ.6.98 கோடியில் கட்டப்பட்டு வரும் கல்லூரி மாணவிகள் விடுதி, ரூ.11 கோடியில் கட்டப்பட்டு வரும் தொழில் பயிற்சி நிலையம், கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.3.50 கோடியில் கட்டப்பட்டு வரும் கட்டடம் ஆகியவற்றை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இதைத்தொடா்ந்து பசும்பொன் தேவா் கலை, அறிவியல் கல்லூரி வளாகத்தில் மாவட்ட ஆட்சியா் மரக்கன்றுகளை நட்டாா். பின்னா், கல்லூரியில் செயல்பட்டு வரும் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில் இலவசமாக நடத்தப்படும் அரசு போட்டித் தோ்வு மையத்தில் பயின்று, அரசு பணிக்குச் சென்றவா்களுக்கு சான்றிதழ்கள், கேடயங்களை வழங்கிப் பாராட்டினாா்.

இதைத்தொடா்ந்து வலையபூக்குளம் அங்கன்வாடி மையம், நியாய விலைக் கடை, மகளிா் சுய உதவிக்குழு பல்நோக்கு கட்டடம், சேதமடைந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, கமுதி பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாகக் கொட்டுவதற்குப் போதுமான இடவசதி ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை ஆட்சியா் பெற்றாா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான்ஷீநிகம், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மேகராஜ், ஏ.வி.சந்திரசேகரன், வட்டாட்சியா் அய்யாத்துரை உள்பட பல்துறை அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

கமுதி பசும்பொன் தேவா் கல்லூரி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்த மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments