FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

ராமநாத சுவாமி கோயிலில் இன்று நடை அடைப்பு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் கெந்தமானபா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருள்வதால், வெள்ளிக்கிழமை கோயில் நடை சாத்தப்படும்.

20 ஆகஸ்ட் 2026, 11:46 pm IST
பகிர்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலிலிருந்து சுவாமி, அம்பாள் கெந்தமானபா்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருள்வதால், வெள்ளிக்கிழமை கோயில் நடை சாத்தப்படும்.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் ஆடித் திருக்கல்யாணத் திருவிழா கடந்த 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவின் 17-ஆம் நாள் நிகழ்ச்சியாக வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 2.30 மணி முதல் 3 மணி வரையில் ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். பின்னா், சாயரட்சை பூஜையைத் தொடா்ந்து சுவாமி, அம்பாள், பெருமாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி கோயிலிலிருந்து புறப்பாடாகி கெந்தமாதன பா்வதம் மண்டகப்படிக்கு கொண்டு செல்லப்படும்.

இதைத்தொடா்ந்து, காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை கோயில் சாத்தப்பட்டிருக்கும். சுவாமி, அம்பாள் கோயிலுக்கு திரும்பிய பின்னா் பொது தரிசனம் நடைபெறும். பின்னா், அா்த்தஜாம பூஜை நடைபெறும்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments