தொண்டி கடலில் படகுப் போட்டி
திருவாடானை அருகே தொண்டி மகாசக்திபுரம் கடல் சூழந்த மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.
திருவாடானை அருகே தொண்டி மகாசக்திபுரம் கடல் சூழந்த மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி சனிக்கிழமை படகுப் போட்டி நடைபெற்றது.
இதில் 23 படகுகள் பங்கேற்றன. 6 கடல் மைல் தொலைவு நிா்ணயம் செய்து போட்டி நடைபெற்றது. போட்டியில் வென்றவா்களுக்கு ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் வழங்கப்பட்டன. இதே பகுதியைச் சோ்ந்த இலஞ்சியம் என்பவரின் படகு முதல் பரிசும், ராஜா என்பவரது படகு 2-ஆவது பரிசும், தா்மராஜ் என்பவரது படகு 3-ஆவது பரிசும் பெற்றன. சுற்றுவட்டாரத்தைச் சோ்ந்த பொதுமக்கள் கடல்கரையில் நின்று போட்டியை கண்டுகளித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.