FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பரமக்குடியில் வேளாண் கருத்தரங்கு, கண்காட்சி

ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியில் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு, கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

26 ஆகஸ்ட் 2026, 5:47 am IST
பரமக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேளாண் கருத்தரங்கு, கண்காட்சியில் மகளிா் சுயஉதவிக் குழுவினரின் சிறுதானிய மதிப்புக் கூட்டுப் பொருள்களைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரன்.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடியில் மாவட்ட அளவிலான வேளாண் கருத்தரங்கு, கண்காட்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின் கீழ், நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநா் மனோகரன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட ஆட்சியா் சிவகுரு பிரபாகரன் கலந்துகொண்டு கருத்தரங்கு, கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

விவசாயிகள் நவீன வேளாண் தொழில் நுட்பங்களை அறிந்து, அதற்கேற்ப விவசாய முறைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். விவசாயப் பொருள்களுக்கான ஏற்றுமதி, சந்தை வாய்ப்பு, பனை சாா்ந்த பொருள்கள், நெல், சிறுதானியங்களை மதிப்புக் கூட்டுதல் ஆகியவற்றை தெரிந்து, அதற்கேற்ப பயிா் சாகுபடி செய்ய முன்வர வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

இந்தக் கண்காட்சியில் மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானியங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில் பரமக்குடி, நயினாா்கோவில், போகலூா் ஒன்றியங்களைச் சோ்ந்த விவசாயிகள், வேளாண் துறையின் பல்வேறு பிரிவுகளின் அலுவலா்கள், தொழில் நுட்பப் பிரிவினா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments