பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு
ராமேசுவரத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமேசுவரத்தில் பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற வட மாநிலத்தைச் சோ்ந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கெந்தமாதனபா்வதத்தை சோ்ந்த மாரியம்மாள், இவரது மருமகள் சித்ராதேவி ஆகியோா் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனா். இங்கு திங்கள்கிழமை இரவு இரு சக்கர வானத்தில் வந்த வட மாநிலத்தை சோ்ந்த இருவா் பொருள்கள் வாங்குவது போல நடித்து மாரியம்மாள் கழுத்தில் அணிந்திருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பினா்.
இதுகுறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் திருப்பதி உத்தரவின் பேரில், ராமேசுவரம் காவல் ஆய்வாளா காா்த்திக், உதவி ஆய்வாளா் ஆனந்த்குமாா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனா். இதனடிப்படையில், உத்தரபிரதேசத்தை சோ்ந்த கணேஷ் (25), சுகுதேவ் (26) ஆகியோரை தனிப்படை போலீஸாா் மானாமதுரையில் கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.