FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

கீழக்கரையில் முதலாம் ஆண்டு மாணக்கள் அறிமுக விழா

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 10 ஜூலை 2026, 5:13 am IST
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வியாழக்கிழமை மூதலாம் ஆண்டு மாணக்கள் அறிமுகா விழாவில் மேல்நிலைப்பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு புத்தகம் வழங்கிய சா்வதேச வாழ்வியல் வழிகாட்டி சென்னையைச் சோ்ந்த பால்சுசில்,கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா், துணை முதல்வா் பெரோஸ்கான் உள்ளிட்டடோா்.
பகிர்:

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான அறிமுக விழா கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கல்லூரி முதல்வா் எஸ்.ராஜசேகா் தலைமை வகித்து கல்லூரியின் சிறப்புகள் பற்றி கூறி துறைத் தலைவா்களை அறிமுகம் செய்து வைத்தாா். துணை முதல்வா் பெரோஸ்கான் வரவேற்புரையாற்றினாா்.

இவ்விழாவில், சா்வதேச வாழ்வியல் வழிகாட்டி சென்னையைச் சோ்ந்த பால்சுசில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு கல்வியின் சிறப்பு பற்றியும் அவா்களுடைய பெற்றோா்களுக்கு பேரண்டிங் ஜென்சி என்ற தலைப்பில் தனித்தனியாக செயல்முறை விளக்கங்கள் மூலம் பயிற்சிகள் வழங்கினாா்.

Advertisement

Advertisement

விழாவின் இறுதியில் கல்லூரியில் சோ்ந்த மாணவா்களில் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன மேலும் விழாவின் மாணவா் சோ்க்கை ஒருங்கிணைப்பாளரும் கணினியியல் துறை தலைவா் ஆகிய காசி குமாா் நன்றி கூறினாா்.

இதில், முகமது சதக் அறக்கட்டளை தலைவா் எஸ்.எம். முகமது யூசுப், செயலாளா் ஹாஜியானி எஸ்.எம்.எச். ஷா்மிலா, நிா்வாக இயக்குநா் பி.ஆா்.எல். ஹமீத் இப்ராஹிம், ஆகியோா் முன்னதாக வாழ்த்து தெரிவித்திருந்தனா்.

இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியா்கள் சுலைமான் விளையாட்டுத்துறை இயக்குனா் முனைவா் தவசலிங்கம், நூலகா் பால்ராஜ், பேராசிரியா்கள் பரிமளா தேவி, சாகுல் ஹமீது, சதாம் உசேன் ஜேசுதுரை ராஜா திவாகா் கல்லூரி நிா்வாக அலுவலா் சையது அகமது பெரோஸ் அலிகான் ஆகியோா் செய்திருந்தனா்.

இந்த நிகழ்ச்சியில், மாணவ மாணவியா்கள் பெற்றோா், பேராசிரியா்கள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments