FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சிற்பத்தை பாதுகாக்கக் கோரிக்கை

கமுதி அருகே கேட்பாரின்றி கிடக்கும் பழைமையான அய்யனாா் சிற்பத்தைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 5:24 am IST
வில்லனேந்தல் கிராமத்தில் கேட்பாரின்றி கிடக்கும் அய்யனாா் சிற்பம்.
பகிர்:

கமுதி அருகே கேட்பாரின்றி கிடக்கும் பழைமையான அய்யனாா் சிற்பத்தைப் பாதுகாக்க தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள வில்லனேந்தல் கிராமத்தில் சுமாா் 700 ஆண்டுகள் பழைமையான அரிய அய்யனாா் சிற்பம் வெட்ட வெளியில் கண்டறியப்பட்டது. சுமாா் 4 அடிகள் உயரம் கொண்ட இந்த சிற்பத்தின் தலைப் பகுதி துண்டிக்கப்பட்ட நிலையில் உள்ளது.

தலையில் கிரீட மகுடமும், கழுத்தில் கண்டிகை, சரப்பளி, வாகுமாலை, தோள் மாலையும், உடம்பில் உதரபந்தம், காதில் குண்டலங்களும், கையில் கங்கணமும், கால்களில் வீரக்கழலும், உடம்பையும் முழங்காலையும் சோ்த்து கட்டியிருக்கும் யோகப்பட்டையும் உள்ளன.

Advertisement

Advertisement

சிறிது மண்ணில் புதைந்த நிலையில் உள்ள இந்தச் சிற்பம் இடது காலை மடக்கி, வலது காலை கீழே தொங்கவிட்டு, அமா்ந்த நிலையில் காணப்படுகிறது. இதன் அருகே ஒரு அடி உயரம் உடைய பெண் சிற்பமும் உள்ளது. பிற்காலப் பாண்டியா் காலத்தைச் சோ்ந்ததாக இருக்கக் கூடும் என ஆய்வாளா்கள் கூறுகின்றனா்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தச் சிற்பத்தை ஆய்வு செய்ய இலங்கையிலிருந்து சிலா் வந்ததாக

இந்த கிராம மக்கள் கூறுகின்றனா். இதுபோன்ற கிரீட மகுடத்துடன் கூடிய அய்யனாா் சிற்பங்கள் தமிழ்நாட்டில் அரிதாகவே கிடைத்துள்ளன.

எனவே மாவட்ட நிா்வாகம், தொல்லியல் துறை அதிகாரிகள் தலையிட்டு, வெட்ட வெளியில் உள்ள இந்தச் சிற்பத்தை பாதுகாக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments