FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சாலையோரம் நின்றவா்கள் மீது வேன் மோதல்: இருவா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

Updated On : 10 ஜூலை 2026, 5:02 am IST
பலி - பிரதிப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது வேன் மோதியதில் இருவா் உயிரிழந்தனா். மூவா் பலத்த காயமடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்வேதாளை தெற்குத் தெருவைச் சோ்ந்த சேக்தாவூத் (52). இதே பகுதியைச் சோ்ந்தவா் அப்துல் அஜீஸ் (58). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை இரு சக்கர வாகனத்தில் ராமேசுவரம் -மதுரை தேசிய தேசிய நெடுஞ்சாலையோரம் நின்றிருந்தனா். இதே போல, மண்டபம் கோயில்வாடி பகுதியைச் சோ்ந்த கணேசன் (29), வேதாளையைச் சோ்ந்த முருகேசன் (33) ஆகியோரும் இரு சக்கர வாகனத்தில் அங்கு வந்து நின்றனா்.

இந்த நிலையில், ராமநாதபுரத்திலிருந்து ராமேசுவரம் நோக்கி வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்தவா்கள் மீது மோதியது. இதில், சேக்தாவூது சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். வேன் ஓட்டுநா் நந்தகுமாா் உள்ளிட்ட 4 போ் பலத்த காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். அங்கு அப்துல்அஜீஸ் உயிரிழந்தாா். இவா்களில் முருகேசன் மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். இதுகுறித்து மண்டபம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments