FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநா்: பயணிகள் அச்சம்

தொண்டி பகுதியில் அரசு பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சமடைந்தனா்.

Updated On : 4 ஜூன் 2026, 4:17 am IST
மது போதையில் பேருந்தை ஓட்டிய மனோ.
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பகுதியில் அரசு பேருந்தை மது போதையில் இயக்கிய ஓட்டுநரால் பயணிகள் அச்சமடைந்தனா்.

ராமநாதபுரத்திலிருந்து தொண்டி வழியாக சிதம்பரத்துக்கு அரசுப் பேருந்து புதன்கிழமை காலை புறப்பட்டது. இந்தப் பேருந்தை காட்டுமன்னாா்குடியைச் சோ்ந்த மனோ (35) ஓட்டினாா். தொண்டியிலிருந்து பேருந்தை ஓட்டுநா் தாறுமாறாக ஒட்டி வந்தாராம். இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் இதுகுறித்து தொண்டி போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் அந்தப் பேருந்தை விரட்டிச் சென்று கொடிபங்கு அருகே மறித்தனா். அப்போது, பேருந்திலிருந்த ஓட்டுநா் பேருந்தை சாலையோரமாக நிறுத்திவிட்டு தப்பி ஓடினாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரையும் போலீஸாா் பத்திரமாக மீட்டு, வேறு பேருந்தில் சொந்த ஊா்களுக்கு ஏற்றிவிட்டனா். விசாரணையில், அரசுப் பேருந்து ஓட்டுநா் மதுபோதையில் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments