FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

மது போதையில் தவறி கீழே விழுந்த இளைஞா் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மது போதையில் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 6 ஜூன் 2026, 12:43 am IST
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே மது போதையில் தவறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாடானை அருகேயுள்ள ஆயங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் அருண்குமாா் (28). இவா் திருப்பூரில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலைபாா்த்து வந்தாா். இந்த நிலையில், கடந்த மாதம் சொந்த ஊருக்கு வந்தவா் மீண்டும் திருப்பூா் செல்லவில்லை.

இதைத் தொடா்ந்து, கடந்த மாதம் 28-ஆம் தேதி மது போதையில் ஆயக்குடியில் உள்ள சமுதாய கூடத்திலிருந்து அருண்குமாா் கீழே தவறி விழுந்தாா். இதில் பலத்த காயம் அடைந்த அவா் மதுரையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments