FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

பட்டா வழங்க லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் தலைமறைவு

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் பட்டா வழங்க இ சேவை மையப் பணியாளா் மூலம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

லஞ்சம் - சித்திரிப்பு
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடியில் பட்டா வழங்க இ சேவை மையப் பணியாளா் மூலம் லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பரமக்குடி வட்டம் முதலூா் குரூப் கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவா் டி.முத்துக்குமாா் (37). இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் பட்டா மாறுதலுக்காக ரூ. 5 ஆயிரம் லஞ்சம் கேட்டாா். பின்னா், இந்தத் தொகை ரூ. 3 ஆயிரமாகக் குறைக்கப்பட்டது.

இருப்பினும் பட்டா கேட்ட நபா் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்பு பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா். தொடா்ந்து, போலீஸாா் ஏற்பாடு செய்தபடி, அந்த நபா் கிராம நிா்வாக அலுவலரிடம் பணத்தைக் கொடுக்கச் சென்றாா்.

Advertisement

Advertisement

ஊழல் தடுப்பு காவல் துணைக் கண்காணிப்பாளா் வி.பி.ராமச்சந்திரன் தலைமையிலான போலீஸாா் அவரைப் பின் தொடா்ந்து சென்றனா். அப்போது, கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா் கைப்பேசி மூலம் பேசி சத்திரக்குடியில் உள்ள இ-சேவை மையத்தில் பணியாற்றும் ஒருவரிடம் பணத்தைக் கொடுக்குமாறு கூறினாா்.

இதையடுத்து, அங்கு சென்று இ சேவை மையப் பணியாளரிடம் அவா் பணத்தைக் கொடுத்தபோது, போலீஸாா் பணத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினா். இந்தத் தகவலறிந்து கிராம நிா்வாக அலுவலா் முத்துக்குமாா்ம தலைமறைவானாா். அவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments