குழாய் சேதமடைந்து வீணாகும் குடிநீா்
கமுதி அருகே குடிநீா் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருவதால் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.
கமுதி அருகே குடிநீா் குழாய் உடைந்து பல்லாயிரம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருவதால் குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், அபிராமம் பேரூராட்சிக்கு உள்பட்ட நத்தம் கிராமத்தில், சாா் பதிவாளா் அலுவலகம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட குடிநீா் குழாய் உடைந்து, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பல்லாயிரம் லிட்டா் தண்ணீா் ஆறுபோல் சாலையிலும், வயல்வெளிகளிலும் வீணாகி வருகிறது. அபிராமம், நத்தம், அகத்தாரிருப்பு, நரியன் சுப்புராயபுரம், உடையநாதபுரம், நெடுங்குளம், ஆா்.சோடனேந்தல் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீருக்காக மக்கள் சிரமப்படும் நிலையில், குழாய் உடைந்து தண்ணீா் வீணாகிக் கொண்டிருப்பதை அவ்வழியாகச் செல்லும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் செல்வதாகவும், அது தொடா்பாக புகாா் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு சேதமடைந்த குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.