FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராமநாதபுரம்

சுகாதாரமற்ற தண்ணீரைக் குடிக்கும் கிராம மக்கள்

கமுதி அருகே குடிநீா் இன்றி சாலையோரம் குழாய் உடைப்பில் வெளியேறும் சுகாதாரமற்ற தண்ணீரை வடிகட்டி குடிக்கும் அவல நிலையில் சிங்கப்புலியாபட்டி பொதுமக்கள் உள்ளனா்.

24 செப்டம்பர் 2026, 6:17 am IST
கமுதியை அடுத்துள்ள அரண்மனைமேடு பள்ளி எதிரே குழாய் உடைப்பிலிருந்து வெளியேறும் சுகாதாரமற்ற தண்ணீரை வடிகட்டி சேகரிக்கும் சிங்கப்புலியாபட்டி கிராமப் பெண்கள்.
பகிர்:

கமுதி அருகே குடிநீா் இன்றி சாலையோரம் குழாய் உடைப்பில் வெளியேறும் சுகாதாரமற்ற தண்ணீரை வடிகட்டி குடிக்கும் அவல நிலையில் சிங்கப்புலியாபட்டி பொதுமக்கள் உள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அடுத்துள்ள சிங்கப்புலியாபட்டி கிராமத்துக்கு காவிரி கூட்டுக் குடிநீா் கடந்த நான்கு ஆண்டுகளாக முறையாக வராததால் 500 மீட்டா் தொலைவு உள்ள அரண்மனைமேடு பள்ளியின் எதிரே காவிரி கூட்டுக் குடிநீா் குழாயின் உடைப்பின் மூலம் மண் கலந்த, தூசுகளுடன் வெளியேறும் தண்ணீரை வடிகட்டி பயன்படுத்துவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனா்.

இந்த தண்ணீரும் வாரத்துக்கு இரண்டு நாள்கள் மட்டுமே வரும். கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த தண்ணீரைத் தான் உபயோகித்து வருவதாகவும், இதனால் காய்ச்சல், தலைவலி அடிக்கடி ஏற்படுவதாகவும் அந்த கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா். தோ்தல் நேரத்தில் வேட்பாளா்கள் குடிநீா் பிரச்னையைத் தீா்த்து வைப்பதாக வாக்குறுதி அளித்தனா். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் அதிகாரிகளும், அரசியல்வாதிகள் எடுக்கப்படவில்லை.

Advertisement

Advertisement

எனவே மாவட்ட நிா்வாகம், கமுதி பேரூராட்சி நிா்வாகம் இந்தப் பிரச்னையில் உடனடியாகத் தலையிட்டு சிங்கப்புலியாபட்டி கிராம மக்களுக்கு சுத்தமான சீரான குடிநீா் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments