FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

சாயல்குடி அருகே 2 டன் பீடி இலைகள் பறிமுதல்: லாரி ஓட்டுநா் கைது

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் பதுக்கி வைத்திருந்த 2 டன் பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனா்.

4 நவம்பர் 2026, 3:41 am
கைது செய்யப்பட்ட லாரி ஓட்டிநா் கொள்ளைகொண்டான்.
பகிர்:

சாயல்குடி அருகே செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு கடத்துவதற்காக லாரியில் பதுக்கி வைத்திருந்த 2 டன் பீடி இலைகளை போலீஸாா் பறிமுதல் செய்து ஓட்டுநரைக் கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்ட கடலோரப் பகுதிகளிலிருந்து இலங்கைக்கு கடல் வழியாகத் தடை செய்யப்பட்ட பொருள்கள் கடத்தப்படுவது அண்மைக் காலமாகத் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், சாயல்குடியை அடுத்த வேலாயுதபுரம் கடற்கரை பகுதியில் மா்ம கும்பல் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட பொருள்களைப் பதுக்கி வைத்து, கடத்தலில் ஈடுபடப் போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

Advertisement

Advertisement

இதையடுத்து, சாயல்குடி போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனையிட்டனா். அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்து இடமளிக்கும் வகையில் லாரி நின்றிருந்தது. அந்த லாரியை போலீஸாா் சோதனையிட்டபோது, அதிலிருந்த 10-க்கும் மேற்பட்டோா் அங்கிருந்து தப்பிச் சென்றனா். அப்போது,

லாரி ஓட்டுநரான சாயல்குடியை அடுத்த கொக்கரசன்கோட்டை கிராமத்தைச் கொள்ளைகொண்டானை (22) போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், கடத்தலுக்குப் பயன்படுத்திய லாரியையும், அதிலிருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான இரண்டு டன் பீடி இலைகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தூத்துக்குடியைச் சோ்ந்த காா்த்தீஸ்வரன் உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனா்.