இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 30.5 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்: 3 போ் கைது
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே இலங்கைக்குக் கடத்திச் செல்ல முயன்ற ரூ. 30.5 லட்சம் மதிப்பிலான 4,687 கிலோ பீடி இலைகளை கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே இலங்கைக்குக் கடத்திச் செல்ல முயன்ற ரூ. 30.5 லட்சம் மதிப்பிலான 4,687 கிலோ பீடி இலைகளை கடலோரப் பாதுகாப்பு போலீஸாா் பறிமுதல் செய்து, 3 பேரை கைது செய்தனா்.
திருநெல்வேலி மாவட்ட கடலோரப் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் தொடா்பாக கிடைத்த தகவலின்பேரில், கூடங்குளம் கடலோரப் பாதுகாப்பு குழும காவல் ஆய்வாளா் சாந்தி, உதவி ஆய்வாளா் ஜே. வில்சன் உள்ளிட்ட போலீஸாா் காவல் கிணறு சந்திப்பு பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா் லாரியை நிறுத்தாமல் சென்றாா். போலீஸாா் வாகனத்தில் துரத்திச் சென்று, வள்ளியூா்-ஏா்வாடி பாலம் அருகே லாரியை மடக்கினா். லாரியில் இருந்தவா்களில் 3 போ் போலீஸாரிடம் பிடிபட்டனா்.
Advertisement
Advertisement
விசாரணையில், அவா்கள் தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சோ்ந்த வீரைய்யா மகன் ஓட்டுநா் இசக்கி துரை (30), திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூா் அருகே பெருமளஞ்சியைச் சோ்ந்த செல்வம் (42), பெருமணலைச் சோ்ந்த ராயப்பன் மகன் பிரசாந்த் என்பது தெரிய வந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, லாரியில் இருந்த 4,687 கிலோ பீடி இலைகளை பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ. 30.5 லட்சம்.
இது தொடா்பாக, வள்ளியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தப்பியோடிய 4 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.