இலங்கைக்கு கடத்த முயற்சி: ரூ. 60 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் மதிப்பிலான 40 மூட்டை பீடி இலைகளை வாகனத்துடன் க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருச்செந்தூா் அருகே வீரபாண்டியன்பட்டணம் கடற்கரையிலிருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற ரூ. 60 லட்சம் மதிப்பிலான 40 மூட்டை பீடி இலைகளை வாகனத்துடன் க்யூ பிரிவு போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
வீரபாண்டியன்பட்டணம் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகளைக் கடத்தவுள்ளதாக தூத்துக்குடி க்யூ பிரிவு காவல் ஆய்வாளா் விஜய அனிதாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், க்யூ பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராமசந்திரன், சிறப்பு உதவி ஆய்வாளா் ராமா், தலைமைக் காவலா்கள் இருதயராஜகுமாா், இசக்கிமுத்து உள்பட போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, சந்தேகமளிக்கும் வகையில் நின்ற சுமை வாகனத்தை சோதனை செய்ததில், படகு மூலம் இலங்கைக்குக் கடத்துவதற்காக தலா 35 கிலோ எடையில் 40 மூட்டை பீடி இலைகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ. 60 லட்சமாகும்.
இதையடுத்து, வாகனத்துடன் பீடி இலை மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா் அவற்றை சுங்கத்துறை வசம் ஒப்படைத்து தொடா்புடைய நபா்களைத் தேடி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.