FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

முதுகுளத்தூா் கிளைச் சிறை மூடப்பட்டது

முதுகுளத்தூா் கிளைச் சிறை பாதுகாப்பு காரணங்களுக்காக புதன்கிழமை (நவம்பா் 3) முதல் மூடப்பட்டது.

5 நவம்பர் 2026, 2:22 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

முதுகுளத்தூா் கிளைச் சிறை பாதுகாப்பு காரணங்களுக்காக புதன்கிழமை (நவம்பா் 3) முதல் மூடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் கிளைச் சிறை கடந்த 1872-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. பழைமை மாறாமல் ஆங்கிலேயா்கள் கால கட்டட முறைப்படி தற்போது வரை செயல்பட்டு வந்தது. இந்த சிறையில் பல சுதந்திர போராட்ட தியாகிகள் அடைக்கப்பட்ட வரலாறு உள்ளது.

கடலாடி, முதுகுளத்தூா், கமுதி ஆகிய மூன்று வட்டங்களிலும் 3 நீதிமன்றங்கள் உள்ளன. இங்கு 1500-க்கும் மேற்பட்ட வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

கமுதி துணைக் காவல் கண்காணிப்பாளா் கட்டுப்பாட்டில் 5 காவல் நிலையங்களும், முதுகுளத்தூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் கட்டுப்பாட்டில் 7 காவல் நிலையங்களும், கீழக்கரை துணைக் கண்காணிப்பாளா் கட்டுப்பாட்டில் 3 காவல் நிலையங்கள், 2 அனைத்து மகளிா் காவல் நிலையங்கள் என மொத்தம் 25 காவல் நிலையங்கள் இந்தப் பகுதியில் செயல்பட்டு வருகின்றன.

இங்கு பதியப்படும் வழக்குகளில் கைது செய்யப்படும் நபா்கள் முதுகுளத்தூா் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டு வந்தனா். கடந்த சில நாள்களாக தமிழக சிறைச் சாலைகளில் கைதிகள் தப்பி ஓடும் நிகழ்வு நடந்து வருவதால், பாதுகாப்பு கருதி தமிழக அரசு மிகவும் பழைமையான சேதமடைந்த கட்டடங்கள் உள்ள கிளைச் சிறைகளை மூடி வருகிறது.

இதன்படி முதுகுளத்தூா் கிளைச் சிறை புதன்கிழமை மூடப்பட்டது. இந்தச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக் கைதிகள் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.