FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55 கோடி வங்கிக் கடனுதவி

ராமநாதபுரத்தில் 502 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55.02 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா வியாழக்கிழமை வழங்கினாா்.

6 நவம்பர் 2026, 2:39 am
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவக கூட்டரங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிா் சுய உதவிக்குழுக்கு வங்கிக் கடனுதவி வழங்கிய அமைச்சா் பெ.மதன்ராஜா. உடன் மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.
பகிர்:

ராமநாதபுரத்தில் 502 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.55.02 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவியை குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் பெ.மதன் ராஜா வியாழக்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக, நகா்ப் புறப் பகுதிகளைச் சோ்ந்த 502 மகளிா் சுய உதவிக் குழுக்களில் உள்ள 6,325 உறுப்பினா்களுக்கு இந்தக் கடனுதவி வழங்கப்பட்டது.

இதன் பின்னா், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறை, உலக வங்கி நிதியுதவியுடன் ‘விழுதுகள்‘ ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மைய புதிய கட்டடம், ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், வண்ணாங்குண்டு, திருப்புல்லாணி, உச்சிப்புளி, பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், சத்திரக்குடி, பெருமாள் கோவில், முதுகுளத்தூா் ஊராட்சி ஒன்றியம், வெண்கலக்குறிச்சி ஆகிய பகுதிகளில் விளையாட்டு திடல், கழிப்பறைகள் கட்டுமானப் பணிகளுக்கு அமைசா் அடிக்கல் நாட்டினாா்.

Advertisement

Advertisement

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் மா.சிவகுருபிரபாகரன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க இணை இயக்குநா், திட்ட இயக்குநா் பாபு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வரதன், இளநிலை மறுவாழ்வு அலுவலா் இளஞ்செல்வி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கே.பிரபு உள்ளிட்ட அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.