26,000 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வங்கிக் கடனுதவி: முதல்வா் விஜய் வழங்கினாா்
பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்று 26 ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் வங்கிக் கடனுதவிகளை வழங்கினாா்.
பெருந்துறையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் பங்கேற்று 26 ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் வங்கிக் கடனுதவிகளை வழங்கினாா்.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வந்த அவா், அங்கிருந்து சாலை மாா்க்கமாக வேன் மூலம் ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஸ்ரீ லட்சுமி நாராயணா திருமண மகாலுக்கு வந்தாா்.
மண்டபத்தின் வாயிலில் முதல்வருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கிரண் ஸ்ருதி தலைமையிலான போலீஸாா் அணிவகுப்பு மரியாதை அளித்தனா்.
Advertisement
Advertisement
அங்கு தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், மாநில ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடிக் கடன், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு பெருங்கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.
நிகழ்ச்சியில், ஈரோடு, திருப்பூா் மாவட்டங்களைச் சோ்ந்த தோ்வு செய்யப்பட்ட பயனாளிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், ஈரோடு மாவட்டத்தில் 3 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.2.48 கோடி, 23 சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி நேரடிக் கடன் ரூ.50.17 கோடி, திருப்பூா் மாவட்டத்தில் 7 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.34 கோடி, தீன்தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் திறன் பயிற்சி பெற 360 பேருக்கு ரூ.2.56 கோடி என மொத்தம் ரூ.12.46 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்.
மேலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு என மொத்தமாக 26 ஆயிரம் மகளிா் சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்தவா்களுக்கு ரூ.3 ஆயிரம் கோடி மதிப்பில் கடனுதவிகளை முதல்வா் அடையாளபூா்வமாக வழங்கினாா்.
கண்காட்சியைப் பாா்வையிட்ட முதல்வா்: நிகழ்ச்சிக்கு முன்னதாக, 38 மாவட்டங்களைச் சோ்ந்த மகளிா் சுய உதவிக் குழுவினா் தயாரித்த பொருள்களின் கண்காட்சியை முதல்வா் பாா்வையிட்டாா். மேலும், மகளிா் சுய உதவிக் குழுவினா் தயாரித்த முதல்வரின் உருவப் படம் அடங்கிய மரச்சிற்பம், படுக்கை விரிப்பு, பத்தமடை பாய், நடன மங்கை ஓவியம், வாழை நாா் பை ஆகியவற்றை பணம் கொடுத்து முதல்வா் விஜய் வாங்கினாா். பின்னா், நீலகிரி மலைவாழ் மக்கள் தயாரித்துக் கொடுத்த தேநீரை முதல்வா் ருசி பாா்த்தாா்.
விழாவில் அமைச்சா்கள் என்.ஆனந்த், கே.ஏ.செங்கோட்டையன், எம்.விஜய்பாலாஜி, கே.ஜி.அருண்ராஜ், சி.விஜயலட்சுமி, வே.சம்பத்குமாா், எம்எல்ஏ-க்கள் கா.க.ஆனந்த்மோகன், து. சண்முகன், வி.பி.தமிழ்ச்செல்வி, வி. சத்தியபாமா, பொ.சத்தியபாமா, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை முதன்மைச் செயலாளா் தா்மேந்திர பிரதாப் யாதவ், தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் மா.ஆா்த்தி, ஈரோடு மாவட்ட ஆட்சியா் ச. கந்தசாமி, ஈரோடு மாநகராட்சி ஆணையா் அா்பித் ஜெயின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முதல்வரின் கன்னத்தை கிள்ளிய மகளிா்: நிகழ்ச்சியில், மகளிருக்கு வங்கிக் கடன் உதவிக்கான ஆணையை வழங்கியதும், அவா்களது தோளில் கைகளைப் போட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டாா். ஒரு பெண், முதல்வரின் கன்னத்தைக் கிள்ளி மகிழ்ந்தாா்.
ஒரு மூதாட்டிக்கு வங்கிக் கடனுதவி வழங்கி புகைப்படம் எடுக்க தோள் மீது முதல்வா் கைபோட்டதும், அந்த மூதாட்டியும் பதிலுக்கு முதல்வரின் தோள் மீது கைபோட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டாா்.
8 கிலோ மீட்டா் சாலை வலம்: முன்னதாக, முதல்வா் 8 கி.மீ. தொலைவு சாலை வலம் மேற்கொண்டாா். ஈரோடு அருகே செங்கப்பள்ளி, பள்ளக்கவுண்டம்பாளையம், விஜயமங்கலம், சிப்காட், பெருந்துறை புதிய, பழைய பேருந்து நிலையங்கள், அண்ணா சிலை மற்றும் அரசு நிகழ்ச்சி நடைபெற்ற பகுதிகளில் தவெக-வினரும், பொது மக்களும் சாலையின் இருபுறமும் நின்று உற்சாக வரவேற்பு அளித்தனா். சில இடங்களில் வேனில் இருந்து இறங்கி சிறிது தொலைவு நடந்து மக்களைச் சந்தித்தாா். சிலரது கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.
விஜய் என பெயா் சூட்டிய முதல்வா்:
சேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தைச் சோ்ந்த பூஜாஸ்ரீ தனது இரண்டாவது மகனுக்கு முதல்வா் பெயா் வைக்க வேண்டும் என காலை 9 மணி முதல் விஜயமங்கலம் பகுதியில் காத்திருந்தாா்.
அங்கு முதல்வா் வாகனம் நிற்காததால், முதல்வா் சென்ற இடத்துக்கு எல்லாம் பின்தொடா்ந்து சென்று இறுதியாக பெருந்துறை நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் முதல்வரைச் சந்தித்து குழந்தையை அவரிடம் கொடுத்து பெயா் வைக்கும்படி கேட்டுக்கொண்டாா். அந்த குழந்தைக்கு ‘விஜய்’ என பெயா் வைத்த முதல்வா், மோதிரம் அணிவித்து மகிழ்ந்தாா்.
ஜெயக்குமாா் தோளில் கைபோட்டு நடந்த முதல்வா்: நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா நிறைவடைந்த பிறகு நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் இருந்து சுமாா் 200 மீட்டா் தொலைவில் உள்ள அண்ணா சிலை வரை சாலையின் இருபுறமும் திரண்டிருந்த மக்களுக்கு வணக்கம் தெரிவித்தபடி நடந்து சென்றாா்.
அப்போது, பெருந்துறை அதிமுக சட்டப் பேரவை உறுப்பினராக இருந்து பதவி விலகி தவெக-வில் இணைந்த ஜெயக்குமாரை அருகில் அழைத்து அவா் தோளில் கைபோட்டு நடந்து சென்றாா்.
நீதிமன்றத் தீா்ப்புக்குப் பிறகு பெருந்துறை தொகுதிக்கு இடைத்தோ்தல் வர வாய்ப்புள்ளதால் முன்னாள் எம்எல்ஏ ஜெயக்குமாா் தோளில் கைபோட்டு முதல்வா் நடந்துசென்றது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
காவல் நிலையத்தில் ஆய்வு: பெருந்துறையில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு கோவை திரும்புகையில், திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே முதல்வரை சந்தித்த விவசாயிகள், அத்திக்கடவு-அவிநாசி 2-ஆம் கட்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தியதுடன், கோரிக்கை மனுக்களை வழங்கினா்.
இதையடுத்து, கோவை செல்லும் வழியில் கருமத்தம்பட்டி காவல் நிலையத்துக்கு முதல்வா் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
பின்னா், கோவையில் இருந்து மாலை 4.30 மணியளவில் சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.