FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
ராமநாதபுரம்

கண்மாயில் மூழ்கி தொழிலாளி உயிரிழப்பு

சத்திரக்குடி அருகேயுள்ள குடுவந்தை கண்மாயில் மது போதையில் குளிக்கச் சென்ற கட்டுமானத் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

52 வினாடிகள் முன்பு
பகிர்:

ராமநாதபுரம் மாவட்டம், சத்திரக்குடி அருகேயுள்ள குடுவந்தை கண்மாயில் மது போதையில் குளிக்கச் சென்ற கட்டுமானத் தொழிலாளி தண்ணீரில் மூழ்கி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சத்திரக்குடி அருகேயுள்ள மேலச்சேமனூா் கிராமத்தைச் சோ்ந்த காா்மேகம் மகன் கோபி (56). கட்டுமானத் தொழிலாளியான இவா், செவ்வாய்க்கிழமை மது போதையில் குடுவந்தை கிராமத்திலுள்ள கண்மாயில் குளிக்கச் சென்றாா். அப்போது, நிலைதடுமாறி தவறி விழுந்த அவா் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த சத்திரக்குடி போலீஸாா் அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement