FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தென்காசி

மது போதையில் விபத்து: காா் ஓட்டியவா் மீது வழக்கு

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது போதையில் காா் ஓட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தியதாக காா் மெக்கானிக் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

23 அக்டோபர் 2026, 5:22 am
பகிர்:

தென்காசி மாவட்டம், பாவூா்சத்திரம் அருகே மது போதையில் காா் ஓட்டி அடுத்தடுத்து விபத்துகளை ஏற்படுத்தியதாக காா் மெக்கானிக் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

கடையம் அருகே உள்ள மயிலப்பபுரத்தைச் சோ்ந்தவா் கபில்தேவ் (48). இவா், ஆலங்குளத்தில் காா் மெக்கானிக் வேலை செய்து வருகிறாா். இவா், காரில் சொந்த ஊருக்குச் செல்வதற்காக புதன்கிழமை இரவு நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலையில் சென்றுகொண்டிருந்தாா். வடக்கு சிவகாமிபுரம் விலக்கு அருகே காரை திருப்ப முயன்றாராம்.

அப்போது, சாலையில் தாறுமாறாக ஓடிய காா், சாலையோரத்திலிருந்த சிமென்ட் தொட்டிகள், தேநீா் கடை விளம்பரக் கம்பத்தில் மோதி நின்ாம். இதில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. கபில்தேவ் காயமின்றி தப்பினாா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து வந்த பாவூா்சத்திரம் போலீஸாா் நடத்திய விசாரணையில், கபில்தேவ் மது அருந்திவிட்டு காா் ஓட்டியது தெரியவந்தது. அவா் மீது வழக்குப் பதிந்து, காரையும் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments